Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/எனக்கு கவலையில்லை : சந்தோஷ் ஹெக்டே

எனக்கு கவலையில்லை : சந்தோஷ் ஹெக்டே

எனக்கு கவலையில்லை : சந்தோஷ் ஹெக்டே

எனக்கு கவலையில்லை : சந்தோஷ் ஹெக்டே

ADDED : ஜூலை 28, 2011 08:37 PM


Google News
பெங்களூரு: ''யார் இருந்தாலும், யார் சென்றாலும் எனக்கு கவலையில்லை.

என் கடமையை நான் செய்துள்ளேன்,'' என்று லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். பெங்களூருவில் நிருபர்களிடம், சந்தோஷ் ஹெக்டே கூறியதாவது: சட்ட விரோத சுரங்க தொழில் குறித்து ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்தியதையடுத்து, முதல்வர் எடியூரப்பாவை ராஜினாமா செய்ய மேலிடம் வற்புறுத்தியது குறித்து, நான் எதுவும் கருத்து தெரிவிக்க மாட்டேன். எனக்கு அரசியலில் விருப்பமில்லை. எனவே, ராஜினாமா குறித்து நான் எதுவும் கூற முடியாது. சட்ட விரோத சுரங்கத்தொழில் குறித்த அறிக்கை தயாரிப்பதில், நான் சரியான வகையில் பணியாற்றியுள்ளேன். யார் இருந்தாலும், போனாலும் எனக்கு ஒன்றும் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. இந்த ஊழல் குறித்து எடியூரப்பா மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கவர்னரையும் கேட்டு கொண்டுள்ளேன்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us