ADDED : செப் 01, 2011 01:27 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த பரனூர் கிருஷ்ணர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ ராதிகா ரமண பக்த கோலாகலன் பிரம்மோற்சவ விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 9ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. காலை 8.30 மணிக்கு ஸ்ரீ ராதிகா ரமண பக்த கோலாகலன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். கிருஷ்ணப்ரேமி சுவாமி தேரை வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேர் முக்கிய வீதிகள் வழி யாக சென்று மாலை நிலையை சென்றடைந்தது.