Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/"லட்சியத்தை அடைய கனவு காணுங்கள்' மாணவர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை

"லட்சியத்தை அடைய கனவு காணுங்கள்' மாணவர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை

"லட்சியத்தை அடைய கனவு காணுங்கள்' மாணவர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை

"லட்சியத்தை அடைய கனவு காணுங்கள்' மாணவர்களுக்கு அப்துல் கலாம் அறிவுரை

ADDED : செப் 15, 2011 09:13 PM


Google News

ராமநாதபுரம் : 'லட்சியத்தை அடைய தூக்கம் வராத கனவு காணுங்கள்,' என்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த கலந்துரையாடலில் மாணவர்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுரை கூறினார்.

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில், 'நீ நீயாக இரு' என்ற தலைப்பில் கல்வி விழிப்புணர்வு கலந்துடையால் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது: நம்முடைய எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன. சந்திராயன் ஆய்வுக்கட்டுரையை நாசா விண்வெளி விஞ்ஞானிகளிடம், நானும், இஸ்ரோ தலைவர் மாதவன் நாயரும், சமர்ப்பிக்க சென்றோம். அப்போது நாசா விண்வெளி மையத் தலைவர், '50 ஆண்டுகளாக மற்ற நாடுகள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய விஞ்ஞானிகளின் ஆய்வு பாராட்டுக்குரியது' என்றார். தனித்தன்மை இருந்தால் தான், வரலாற்றில் மாணவர்கள் இடம் பிடிக்க முடியும். நம்மை, மற்றவர்களை போல மாற்ற இந்த உலகம் முயற்சிக்கிறது. அந்த மாய வலைக்குள் சிக்காமல், 'நீ, நீயாக' இருக்க வேண்டும். நான் இளைய சமுதாயத்தை ஆரம்பித்துள்ளேன். இதில் இயக்க தலைவர் கிடையாது. 10 இளைஞர்கள் இதை இணைந்து செயல்படுத்துகின்றனர். இந்த இளைஞர் சமுதாயம் மூலம் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். என்றார். ராமநாதபுரம் நிகழ்ச்சியில், 'நல்லொழுக்கத்தை பெற, இறை வழியில் வாழும் பெற்றோர், ஆரம்ப பள்ளி ஆசிரியர்களே உறுதுணையாக இருப்பர், என்ற இவர், 'நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன், எங்கிருக்கிறது என் லட்சிய சிகரம் என் இறைவா. தோண்டிக் கொண்டே இருக்கிறேன் அறிவுப்புதையலை தேடி. பெருங்கடலில் நீந்துகின்றேன், அமைதித்தீவை தேடி' என்ற கவிதையை வாசித்தார்.



ஐந்து, ஐந்து அறிவுரைகள் : அப்துல் கலாமின் அறிவுரைகள்: நான், எனது என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும். ஒரு ஆண்டில் ஐந்து பேருக்காவது எழுத படிக்க சொல்லி கொடுக்க வேண்டும். ஐந்து மரங்களை வளர்க்க உறுதி எடுக்க வேண்டும். வீடு, சுற்று புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். மது, போதையிலிருந்து ஐந்து பேரை மீட்க உறுதி மொழி எடுக்க வேண்டும். ஜாதி, மதம், மொழி பாகுபாடின்றி அனைவருடனும் சமமாக நடந்து கொள்ள வேண்டும். நேர்மையாக நடந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். தாய்நாட்டை நேசித்து, பெண்குலத்தை மரியாதையோடு நடத்த உறுதி பூண வேண்டும். அறிவு தீபத்தை ஏற்றி, இந்தியாவை சுடர் விட செய்ய வேண்டும்.



'எனது ஓட்டு உங்களுக்கு': மாணவி கேள்விக்கு, கலாம் நகைச்சுவை : படித்து முடித்தவுடன் வேளாண் துறை குறித்து படிக்க வேண்டும். இது குறித்து வழிகாட்ட கிராமங்கள் தோறும் குழு அமைக்க தாங்கள் முயற்சிக்க வேண்டும் என ஒரு மாணவியின் கேள்விக்கு, 'நலிவடைந்த விவசாய துறை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்' என்ற உங்களுடைய கேள்வி, 'என்னை மகிழ்விக்கிறது. நீங்கள் தேர்தலில் நின்றால், என்னுடைய ஓட்டு, உங்களுக்குத்தான்' என பதிலளித்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us