ரூ.1.11 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்
ரூ.1.11 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்
ரூ.1.11 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஆக 15, 2011 02:13 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் பேசுகையில், ''தமிழத்துக்கு வேண்டிய நல்லத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்துகிறார். தினமும் முதல்வர் ஜெயலலிதா 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார். இந்த ஆட்சியில் பல்வேறு துறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தற்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது,''என்றார். சமூக பாதுகாப்புத் திட்டத்தில் தலா 1,000 ரூபாய் வீதம் 27 பேருக்கு, இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகையாக 27 ஆயிரம் ரூபாய், 40 பேருக்கு தலா 1,000 ரூபாய் வீதம் இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை 40 ஆயிரம் ரூபாய், நான்கு பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 4,000 ரூபாய். மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோர் மானியத் தொகை ஒன்பது பேருக்கு 20 லட்சத்து 15 ஆயிரத்து 475 ரூபாய், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஐந்து பேருக்கு 16 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பில் தையல் மிஷின்கள். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் ஐந்து பேருக்கு 12 ஆயிரத்து 50 ரூபாய் மதிப்பில் இலவச சலவைப் பெட்டி, மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் 3 பேருக்கு 12 ஆயிரத்து 825 ரூபாய் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், மூன்று பேருக்கு 13 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பில் செயற்கை கால், மூன்று பேருக்கு 11 ஆயிரத்து 620 ரூபாயில் முடநீக்கியல் சாதனம். வேளாண்மை துறை சார்பில் ஐவருக்கு மானியத் தொகை 7,900 ரூபாய், தோட்டக்கலைத் துறை சார்பில் மூவருக்கு காய்கறி விதைகள், மா செடிகள் மானியம் 10 ஆயிரத்து 130 ரூபாய், மகளிர் திட்டம் சார்பில் 80 குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் கடனுதவி 72 லட்சம் ரூபாய், பெருந்துறை துடுப்பதி பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புக்கு பெருங்கடன் 15 லட்சம் ரூபாய், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் 50 பேருக்கு புதிய ரேஷன்கார்டுகள், வருவாய்த் துறை மூலம் 36 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா என 303 பேருக்கு ஒரு கோடியே 11 லட்சத்து 33 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.