குருவாயூர் கோவிலில் இன்று இல்லம் நிறா உற்சவம்
குருவாயூர் கோவிலில் இன்று இல்லம் நிறா உற்சவம்
குருவாயூர் கோவிலில் இன்று இல்லம் நிறா உற்சவம்
ADDED : ஆக 01, 2011 11:31 PM
குருவாயூர்: கேரளா திருச்சூர் மாவட்டம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஆண்டுதோறும் விவசாயிகள், தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்த புதிய நெற்கதிர்களைக் கொண்டு வந்து, சுவாமிக்கு படைப்பது வழக்கம்.
இல்லம் நிறா என்ற பெயரிலான இந்த உற்சவம், இன்று காலை கோவிலில் சீவேலி (உற்சவர் கோவிலுக்குள் உலா வரும் நிகழ்ச்சி) முடிந்த பின், காலை 7.21 மணிக்கு நடக்கும். இதற்காக, தங்களது விளை நிலங்களில் சாகுபடியை, சில தினங்களுக்கு முன்பாகவே விவசாயிகள் துவக்கி விட்டனர். இதில், குறிப்பாக ஆலாட்டு வேலப்பன் என்பவர் தான், அதிகளவு கோவில்களில் நெற்கதிர்களை சமர்ப்பித்து வருகிறார். இதற்கான உற்சவ நிகழ்ச்சியில், கோவில் கீழ்சாந்திக்காரர்கள் (அர்ச்சகர்கள்) திரளாகக் கலந்துகொண்டு, கொடி மரத்திற்கு கீழே, புதிய நெற்கதிர்களை பெற்றுக் கொள்வர். பின்னர் அவற்றை அவர்கள் தலையில் சுமந்துகொண்டு, கோவிலில் மூலவருக்கு எடுத்துச் சென்று படைப்பர். பூஜைக்கு பின் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும். அவற்றை சிலர் எடுத்துச் சென்று, தங்கள் வீடுகளிலோ அல்லது நிறுவனங்களிலோ வைத்து படைப்பர். இதுபோல், குருவாயூரில் உள்ள பிற கோவில்களான, பார்த்தசாரதி கோவில், திருவெங்கடாசலபதி கோவில், நாராயணக்குளங்கரா உட்பட, பல கோவில்களிலும் இல்லம் நிறா உற்சவம் நடைபெறும்.