/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வழிப்பறி கும்பல் குறித்து வனத்துறை விசாரணைவழிப்பறி கும்பல் குறித்து வனத்துறை விசாரணை
வழிப்பறி கும்பல் குறித்து வனத்துறை விசாரணை
வழிப்பறி கும்பல் குறித்து வனத்துறை விசாரணை
வழிப்பறி கும்பல் குறித்து வனத்துறை விசாரணை
ADDED : ஜூலை 24, 2011 09:03 PM
பண்ணைக்காடு : தாண்டிக்குடி மலைப்பகுதியில் கடத்தல் மரம் ஏற்றி சென்ற லாரியை நிறுத்தி, நள்ளிரவில் பணம் பறிக்க முயன்ற கும்பல் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் சித்தூர் மலை ரோட்டில் நள்ளிரவில் மரங்களுடன் சென்ற மினி லாரியை மர்ம கும்பல் நிறுத்தி பணம் பறிக்க முயன்றது. இதுபோன்ற சம்பவம் மலைப்பகுதியில் முதன் முதலாக நடந்துள்ளது.
இதுகுறித்து ஹெச்.பி., ரேஞ்சர் பத்மாநாபன் கூறியதாவது: மங்களம்கொம்பு பகுதியிலிருந்து நள்ளிரவில் கடத்தல் மரங்களுடன் சென்ற மினி லாரியை மணலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த சிலர் வழிமறித்து பணம் கேட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் சிலர் சட்டத்திற்கு புறம்பாக வழிப்பறியில் ஈடுபட்டது போன்று நடந்துள்ளது வருத்ததிற்குரியது. இதுகுறித்து விசாரித்து சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பப்படவுள்ளது. மரம் கடத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.