ADDED : செப் 28, 2011 01:00 AM
மதுரை : மதுரை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் நேற்றுடன் 6466 பேர்
மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4074 பேர்,
ஊராட்சி மன்ற தலைவருக்கு 1307, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 441
பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 32 பேர் மனுத்தாக்கல்
செய்துள்ளனர். பேரூராட்சி வார்டு உறுப்பினராக 233 பேர், நகராட்சி மன்ற
வார்டு உறுப்பினராக 139 பேர், மாநகராட்சி கவுன்சிலராக 205 பேர், பேரூராட்சி
தலைவராக 18 பேர், நகராட்சி தலைவராக 6 பேர், மாநகராட்சி மேயர் பதவிக்கு 11
பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.