அனைத்து கட்சியினருக்கு ஜெ., வேண்டுகோள்
அனைத்து கட்சியினருக்கு ஜெ., வேண்டுகோள்
அனைத்து கட்சியினருக்கு ஜெ., வேண்டுகோள்

சென்னை:'மத வன்முறை தடுப்புச் சட்ட மசோதாவை, அறிமுக நிலையிலேயே தூக்கியெறிய, அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:மத வன்முறை தடுப்புச் சட்டத்தை, பார்லிமென்டின் இந்தக் கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனது அறிக்கையின் பிரதியும், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் அல்லாத அனைத்து எம்.பி.,க்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாசிச மசோதாவுக்கு எதிராக குரல் கொடுக்கும்படி அதில் கேட்டுள்ளேன்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்த மசோதாவை கொண்டு வருவதற்கான உண்மையான உள்நோக்கத்தை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பார்லிமென்ட் எம்.பி.,க்கள் புரிந்து கொண்டு, அறிமுக நிலையிலேயே இதை தூக்கியெறியச் செய்ய, ஒன்றுபட வேண்டுமென அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


