விவசாயிகளுக்கு உழவர் கையேடுதயாரிக்கும் பணி தீவிரம்
விவசாயிகளுக்கு உழவர் கையேடுதயாரிக்கும் பணி தீவிரம்
விவசாயிகளுக்கு உழவர் கையேடுதயாரிக்கும் பணி தீவிரம்
ADDED : செப் 25, 2011 05:39 AM
சிவகங்கை:தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ள நிலையிலும் சிறு,குறு விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த உழவர் கையேடு, சிவகங்கையில் வி.ஏ.ஓ., க்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளாக கண்டறியப்பட்ட 82 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் என, அ.தி.மு.க., அரசு பொறுப்பபேற்றதும் அறிவித்தது. இத்திட்டத்தில் சேர நன்செய் நிலமாக இருந்தால், விவசாயிக்கு இரண்டரை ஏக்கர் நிலமும், புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கரும் இருக்க வேண்டும். குறு விவசாயியாக இருந்தால் ஒன்னேகால் ஏக்கர் நன்செய் நிலம், புன்செய் நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் வைத்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு 'ஒருங்கிணைந்த உழவர் கையேடு' வழங்கப்படும் என்றும், கடந்த செப்.,15 ல் இந்த திட்டம் துவங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், முறையாக இந்த திட்டம் துவக்கப்படவில்லை. எனினும், விவசாயிகளுக்கு விபர கையேடு வழங்குவதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. விபர கையேட்டில் ஒரு புறம் முதல்வர் ஜெ., படமும், மறுபுறம் விவசாயி புகைப்படமும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த அட்டை அந்தந்த பகுதி வி.ஏ., ஓக்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


