/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/25 காசு பிரச்னை: ரேஷன் ஊழியர்கள் தவிப்பு25 காசு பிரச்னை: ரேஷன் ஊழியர்கள் தவிப்பு
25 காசு பிரச்னை: ரேஷன் ஊழியர்கள் தவிப்பு
25 காசு பிரச்னை: ரேஷன் ஊழியர்கள் தவிப்பு
25 காசு பிரச்னை: ரேஷன் ஊழியர்கள் தவிப்பு
ADDED : ஜூலை 27, 2011 03:25 AM
ராமநாதபுரம்:செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்பும், 25 காசு பிரச்னையால் ரேஷன் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
பெரும்பாலும், மூன்று உறுப்பினர் கொண்ட ரேஷன் கார்டுகளும், இதிலும் அரிசி, மண்ணெண்ணெயை விட சர்க்கரை வாங்குபவர்களே அதிகம். ரேஷனில் ஒரு கிலோ சர்க்கரை 13 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது. ஒன்றரை கிலோவுக்கு 20 ரூபாய் 25 காசுக்கு பில் போடப்படுகிறது. இந்நிலையில் 25 காசு நாணயம் இனி செல்லாது, என ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. இதுவே இப்போதுரேஷன் கடைகளில் பிரச்னையாகிவிட்டது. இது குறித்து ரேஷன் ஊழியர் ஒருவர் கூறும்போது: கார்டுதாரர்களில் சில்லறை தர தர மறுக்கின்றனர். ஒவ்வொரு நாள் கணக்கு முடிக்கும்போது 5 ரூபாய் வரை நாங்கள் கையில் இருந்து போட வேண்டியது உள்ளது. 25 காசு பிரச்னை தீர ரேஷன் பொருட்களின் விலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும், என்றார்.