Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நூல் விலை கட்டுப்படியாகாமல் பஞ்சை விற்கும் நூற்பாலைகள்

நூல் விலை கட்டுப்படியாகாமல் பஞ்சை விற்கும் நூற்பாலைகள்

நூல் விலை கட்டுப்படியாகாமல் பஞ்சை விற்கும் நூற்பாலைகள்

நூல் விலை கட்டுப்படியாகாமல் பஞ்சை விற்கும் நூற்பாலைகள்

ADDED : ஜூலை 21, 2011 12:48 AM


Google News

திருப்பூர் : நூல் விலை குறைந்து வருவதால், கைவசமுள்ள பஞ்சை விற்பனை செய்து, நஷ்டத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக, சர்வதேச அளவில் பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்திய நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சு கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக, நூல் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தன. தற்போது, உலக அளவில் பஞ்சுக்கு விலை குறைந்துள்ளது; பயன்பாடும் குறைந்து விட்டது.குறிப்பாக, திருப்பூரில் சாயத்தொழிலில் பிரச்னை நீடிப்பதால், பின்னலாடை உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் கொள்முதல் செய்வதை குறைத்துக் கொண்டனர். நூல் விலையை குறைத்துக் கொடுத்தாலும், விற்பனை சீராக நடக்கவில்லை. இதனால், மென்மேலும் நூல் தேக்கம் ஏற்பட்டு, நஷ்டத்துக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும். நஷ்டத்தில் இருந்து தப்பும் வகையில், நூற்பாலைகள் தள்ளுபடி விலையில் நூல் விற்பனை செய்ய முன்வந்துள்ளன.சாயப்பிரச்னை தீராமல், புதிய ஆர்டர்களை ஒப்புக்கொள்ள உற்பத்தியாளர்கள் தயாரில்லை. இருப்பினும், தேங்கியுள்ள நூலிழைகளை விற்பது நூற்பாலைகளின் குறிக்கோளாக உள்ளது. நூல் விற்பனை தொடர்ந்து மந்தமாக இருப்பதால், மென்மேலும் விலை குறைத்து நஷ்டத்துக்கு விற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பெரும் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில், கைவசம் உள்ள பஞ்சை விற்கவும் சில நூற்பாலைகள் முன்வந்துள்ளன.இதுகுறித்து நூற்பாலை உரிமையாளர்கள் கூறுகையில்,'தற்போதைக்கு நூல் விற்பனை சீராவதாக இல்லை. இதனால், உற்பத்தியாகும் நூலிழைகளை நஷ்டத்துக்கு கொடுப்பதற்கு பதிலாக, கைவசம் உள்ள பஞ்சை விற்பது சரியானதாக தோன்றுகிறது. தற்போதைய நூல் விலை அடிப்படையில் பார்த்தால், பஞ்சு ஒரு கேண்டி 26 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். ஆனால், பஞ்சு விலை 36 ஆயிரம் ரூபாயாக இருப்பதால், நூல் உற்பத்தி செய்து விற்றால், பெரும் நஷ்டம் ஏற்படும். வரும் பருத்தி சீசனுக்கு பின், நிலைமை சீராகலாம். எனவே, தற்போது கைவசமுள்ள பஞ்சுகளை விற்க சிலர் முடிவு செய்துள்ளனர்,' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us