/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கணவன்-மனைவி இடையே தகராறு: 9 பேர் மீது வழக்குகணவன்-மனைவி இடையே தகராறு: 9 பேர் மீது வழக்கு
கணவன்-மனைவி இடையே தகராறு: 9 பேர் மீது வழக்கு
கணவன்-மனைவி இடையே தகராறு: 9 பேர் மீது வழக்கு
கணவன்-மனைவி இடையே தகராறு: 9 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 25, 2011 12:30 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் கைகாட்டியை சேர்ந்தவர் ஜெயசங்கர்,46.
இவரது மனைவி நீலாவதி. ஜெயசங்கர் வெளிநாட்டில் சம்பாதித்த 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 22 சவரன் நகைகளுக்கு கணக்கு கேட்டதால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் நான்கு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நீலாவதிக்கு அவரது தந்தை எழுதி கொடுத்த ஒரு ஏக்கர் நிலத்தில் கடந்த 19ம் தேதி ஜெயசங்கர் பந்தல் அமைத்தார். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து இரு தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.