ADDED : ஜூலை 14, 2011 12:11 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை வார சந்தையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ரெய்டில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் சிந்தனை செல்வன் தலைமையில் துணை ஆய்வாளர் பத்மாவதி, உதவி ஆய்வாளர்கள் கனகசபை, ராஜகோபால், ஜான் ஜவகர்எட்வின் நேற்று உளுந்தூர்பேட்டை வார சந்தையில் திடீரென சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது முத்திரை யிடாமல், நுகர்வோருக்கு எடை குறைவாக பொருட்களை விற்பனை செய்தது கண்டறிந்தனர். அதன்பேரில் 20க்கும் மேற்பட்ட தராசு, எடை கற்களை பறிமுதல் செய்தனர். தொழிலாளர் துறை அதிகாரிகள் வார சந்தையில் திடீரென சோதனையில் ஈடுபட்டதை அறிந்த பல வியாபாரிகள் தராசு, எடை கற்களை பதுக்கி வைத்தனர். அதிகாரிகளின் திடீர் ரெய்டு மக்களிடையே வரவேற்பை பெற்றதோடு பரபரப்பை ஏற்படுத்தியது.


