ADDED : ஜூலை 26, 2011 12:09 AM
பாகூர் : அரங்கனூர் எரமுடி அய்யனார் கோவிலில் ஊரணி பொங்கல் வழிபாடு நேற்று நடந்தது.பாகூர் அடுத்த அரங்கனூர் முத்தாலம்மன், எரமுடி அய்யனார் கோவில் ஆடி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
5 நாட்கள் நடந்த இந்த விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், வீதியுலாவும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று எரமுடி அய்யனாருக்கு ஊரணி பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.