/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/நில மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் கைது :புதுகையில் இருவர் தலைமறைவுநில மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் கைது :புதுகையில் இருவர் தலைமறைவு
நில மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் கைது :புதுகையில் இருவர் தலைமறைவு
நில மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் கைது :புதுகையில் இருவர் தலைமறைவு
நில மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் கைது :புதுகையில் இருவர் தலைமறைவு
ADDED : ஜூலை 23, 2011 12:02 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆட்டாங்குடியைச் சேர்ந்தவர் வேலு.
இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது தம்பி மாரிமுத்துவுக்கு சொந்தமான 22 சென்ட் இடத்தை விலைபேசி கடந்த 1997ல் வாங்கியுள்ளார். ஆனால், அந்நிலத்தை தனது பெயருக்கு வேலு பட்டா மாற்றம் செய்யவில்லை. இந்நிலையில் உடல்நலக் குறைவால் வேலு இறந்துவிட்டார்.
அண்ணன் வேலுவுக்கு விற்ற அதே இடத்தை மீண்டும் மாரிமுத்து புதுக்கோட்டை டவுன் காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த சின்னையா என்பவரிடம் அடமானமாக வைத்து மூன்று லட்ச ரூபாய் பெற்றுள்ளார். வட்டி செலுத்த தவறியதால் கடன் தொகை ஐந்தாண்டில் 10 லட்ச ரூபாயாக எகிறியது.
இதையடுத்து சின்னையா வட்டியுடன் கடன் தொகையை திருப்பித்தருமாறு மாரிமுத்துவிடம் கேட்டுள்ளார். அவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சின்னையா அடமானமாக வைத்த இடத்தை தனது மகன் பாரத் பெயரில் கிரயம் வாங்கியுள்ளார்.
பின்னர் வருவாய்த்துறையினரிடம் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து பாரத் பெயரில் பட்டாவும் வாங்கியுள்ளார். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு 22 லட்சம் ஆகும். இதையடுத்து இடத்தை சுற்றி வேலி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சின்னையா, இவரது மகன் பாரத் ஆகியோர் ஈடுபட்டனர்.
இதையறிந்த நில உரிமையாளர் வேலுவின் மனைவி பொன்னழகு, மகன் செல்வம் ஆகியோர் வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் பின்னரே போலி ஆவணங்கள் மூலம் அவர்களது இடத்தை சின்னையா தனது மகன் பெயரில் கிரயம் செய்துள்ளது தெரியவந்தது. இருந்தும் அவர்கள் எதிர்க்கவே சின்னையா, இவரது மகன் பாரத் ஆகியோர் அரிவாள், பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களைக் காட்டி அவர்களை மிரட்டியுள்ளார்.
ஏமாற்றமடைந்த வேலு மனைவி பொன்னழகு, மகன் செல்வம் ஆகியோர் இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பி ரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.
விசாரணையில், வேலுவுக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணம் மூலம் சின்னையா, மகன் பாரத் ஆகியோர் அபகரித்துள்ளதும், இதற்கு வேலுவின் தம்பி மாரிமுத்து உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து நில மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் சின்னையாவை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபின் புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது மகன் பாரத் மற்றும் மாரிமுத்துவை போலீஸார் தேடிவருகின்றனர்.
சின்னையா 'பாரத் செப்டிக் டேங்க் கிளீனிங்' என்ற பெயரில் தொழில் செய்துவருவதோடு, கந்து வட்டிக்கு கடன் வழங்கியும் வருகிறார்.