/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கழிவுநீர் கால்வாய் மீது ஆக்ரமிப்பு புளியங்குடியில் சுகாதார சீர்கேடுகழிவுநீர் கால்வாய் மீது ஆக்ரமிப்பு புளியங்குடியில் சுகாதார சீர்கேடு
கழிவுநீர் கால்வாய் மீது ஆக்ரமிப்பு புளியங்குடியில் சுகாதார சீர்கேடு
கழிவுநீர் கால்வாய் மீது ஆக்ரமிப்பு புளியங்குடியில் சுகாதார சீர்கேடு
கழிவுநீர் கால்வாய் மீது ஆக்ரமிப்பு புளியங்குடியில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூலை 24, 2011 01:34 AM
புளியங்குடி : புளியங்குடி மெயின்ரோட்டில் கழிவுநீர் கால்வாய்கள் மீது ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் சுத்தம் செய்யப்படாமல் தண்ணீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புளியங்குடி நகரின் மெயின்ரோட்டில் உள்ள கழிவுநீர் ஓடைகள் மீது நடைபாதைகள் அமைத்து ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் நகராட்சி சுகாதார பணியாளர்களால் இதனை சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாய்கள் மண்மேடாகிவிட்டன.இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது.
மேலும் மழை சிறிதளவு பெய்தாலும் கூட கழிவுநீருடன் மழைநீரும் கலந்து கழிவுநீர் செல்ல வழியின்றி தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடுகின்றது. இது பெரும் துர்நாற்றத்தை ஏற்படுத்தி செல்கிறது. இதனால் கொசு தொல்லையும் அதிகரித்து வருகின்றது.எனவே இதனை தடுக்க கழிவுநீர் கால்வாய்கள் மீதுள்ள ஆக்ரமிப்புகளை முழுமையாக அகற்றி அதனை சுத்தம் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.