/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வேட்பாளர் போஸ்டர், பேனர், சுவர் எழுத்து விளம்பரங்களுக்கு தடை : தேர்தல் ஆணையம் அறிவிப்புவேட்பாளர் போஸ்டர், பேனர், சுவர் எழுத்து விளம்பரங்களுக்கு தடை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வேட்பாளர் போஸ்டர், பேனர், சுவர் எழுத்து விளம்பரங்களுக்கு தடை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வேட்பாளர் போஸ்டர், பேனர், சுவர் எழுத்து விளம்பரங்களுக்கு தடை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வேட்பாளர் போஸ்டர், பேனர், சுவர் எழுத்து விளம்பரங்களுக்கு தடை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ADDED : அக் 01, 2011 11:26 PM
வள்ளியூர் : 'தமிழக உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் போஸ்டர், பேனர், சுவர் எழுத்துக்கள் மூலம் விளம்பரம் செய்யக் கூடாது' என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சேவியர் கிறிசோநாயகம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேட்பாளர்கள் பெயரிலோ, கட்சிகள் பெயரிலோ மற்றும் அதன் தொடர்பான அனைத்து விதமான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பர போஸ்டர்ளோ, டிஜிட்டல் பேனர்களோ, சுவரில் எழுதப்பட்டோ மாநிலத்தில் எவ்விடத்திலும் இருத்தல் கூடாது என அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுபோன்றே நடக்கவிருக்கின்ற உள்ளாட்சி தேர்தல்களிலும் எவ்விதமான விளம்பர தட்டிகளோ (போஸ்டர்), விளம்பர பட்டிகைகளோ (டிஜிட்டல் பேனர்), சுவரொட்டிகளோ, விளம்பர படங்களோ (கட் அவுட்) மாநிலத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அவைகள் அனைத்தும் உடனடியாக அகற்றபட வேண்டும்.
சுவர்களில் வேட்பாளர்கள் பெயரோ, கட்சிகள் பெயரோ அல்லது அதன் தொடர்பான வாசகங்கள் வண்ணப்பூச்சுகளால் எழுதப்பட்டிருந்தால் அவைகள் அனைத்தையும் இடத்திற்கு தகுந்தாற்போல் வேறுவிதமான வண்ண பூச்சுகளால் மறைத்து அளிக்கப்பட வேண்டும். இப்பணியை எவ்வித இடர்களும் இல்லாமலும், பாகுபாடு இன்றியும் மேற்கொள்ள வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.


