/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மதில்சுவர் இடிந்து விழுந்து பெண் தொழிலாளி சாவுமதில்சுவர் இடிந்து விழுந்து பெண் தொழிலாளி சாவு
மதில்சுவர் இடிந்து விழுந்து பெண் தொழிலாளி சாவு
மதில்சுவர் இடிந்து விழுந்து பெண் தொழிலாளி சாவு
மதில்சுவர் இடிந்து விழுந்து பெண் தொழிலாளி சாவு
ADDED : செப் 01, 2011 01:33 AM
புதுச்சேரி : கருவடிக்குப்பத்தில் கழிவு நீர் வாய்க்கால் பள்ளம் தோண்டும்போது, மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தார்.
இருவர் பலத்த காயமடைந்தனர். லாஸ்பேட்டை-கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில் கடந்த சில தினங்களாக கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் அரியாங்குப்பம் அடுத்த இருசாம்பாளையம் காந்தி,45, பாகூர் அடுத்த உள்ளடிப்பட்டு யசோதா,40, நத்தமேடு பூரணி ஆகியோர் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரமாக இருந்த மதில் சுவர் சரிந்துள்ளது. இந்த இடிபாடுகளில் மூவரும் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து பொது மக்கள் லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசாருடன், பொது மக்களும் சேர்ந்து இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த மூவரையும் மீட்டனர். இதில் பெண் தொழிலாளி காந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த இருவரும் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கவனக்குறைவாக வேலை வாங்கி உயிர் சேதம் ஏற்படுத்துதல் (304) (ஏ) என்ற பிரிவின் கீழ் வேல்ராம்பட்டைச் சேர்ந்த கான்ட்ராக்டர் மோகன் என்பவர் மீது லாஸ்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்துள்ளார்.