/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கான்கிரிட் தளம் அமைத்து கொடுங்க :வியாபாரிகள் கெஞ்சல்கான்கிரிட் தளம் அமைத்து கொடுங்க :வியாபாரிகள் கெஞ்சல்
கான்கிரிட் தளம் அமைத்து கொடுங்க :வியாபாரிகள் கெஞ்சல்
கான்கிரிட் தளம் அமைத்து கொடுங்க :வியாபாரிகள் கெஞ்சல்
கான்கிரிட் தளம் அமைத்து கொடுங்க :வியாபாரிகள் கெஞ்சல்
ADDED : செப் 06, 2011 11:21 PM
கோவை : மேட்டுப்பாளையம் ரோடு அண்ணா தினசரி மார்க்கெட்டில் கான்கீரிட் தளம் அமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுபாளையம் ரோடு, சாய்பாபா கோவிலில் அண்ணா தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. தினமும் மேட்டுபாளையம், ஊட்டி, தேனி, மதுரை, பல்லடம், தொண்டாமுத்தூர், காரமடை, அன்னூர், எஸ்.எஸ்.,குளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து காய்கறிகள் மார்க்கெட்டிற்கு வருகின்றன. இதில் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காய்கறிகள் இறக்குவது மற்றும் ஏற்றுவது தொடர்பாக நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் உள்ளே வந்து செல்கின்றன. அதிகாலை முதல் இரவு வரை மார்க்கெட்டில் விற்பனை நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், மார்க்கெட் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. காய்கறி வாங்க வந்த பெண்கள் உட்பட சேற்றில் விழுந்து சங்கடத்துக்குள்ளாயினர். காய்கறிகளை ஏற்றி இறக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மார்க்கெட் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இப்பிரச்னை மழைக்காலங்களில் தொடர்கதையாகி வருகிறது. இன்னும் மூன்று மாதத்திக்கு வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், மாநகராட்சி நிர்வாகம், மார்க்கெட் முழுவதும் கான்கிரிட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வியாபாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.