ADDED : ஆக 28, 2011 01:10 AM
ஊட்டி : மாணவர்கள் மத்தியில் அஞ்சல் குறியீட்டு எண்ணை விளம்பரம் படுத்தும் நோக்கில் தபால் துறை சார்பில் வினாடி வினா போட்டிகள் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது.போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியும் இரண்டு உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்க வயது, வகுப்பு தகுதி இல்லை. பள்ளிகளால் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மற்ற போட்டியாளர்களுடன் சிறந்த முறையில் போட்டியிட தகுதியானவர்களாக இருக்க வேண்டும். கல்வி தகுதி பிளஸ்டூ. போட்டியிடும் அனைத்து பள்ளிகளும் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு கடிதம் அல்லது நேரடியாக தொடர்பு கொள்ள ' அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி அஞ்சல் கோட்டம், உதகை. தொலைபேசி எண்கள்:2443785, 2444193 தொடர்பு கொள்ளலாம்.


