வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு: கருணாநிதி ஆலோசனை
வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு: கருணாநிதி ஆலோசனை
வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு: கருணாநிதி ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது குறித்தும், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்தும், மாவட்டச் செயலர்களுடன், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, வரைவுப் பட்டியல் தயாராகியுள்ளது. இதன்படி, அனைத்து மாவட்டச் செயலர்களையும் அழைத்து, வரைவுப் பட்டியலில் உள்ள வேட்பாளர் பெயர்களை, தி.மு.க., தலைவர் கருணாநிதி இறுதி செய்துள்ளார். அவருடன், பொதுச்செயலர் அன்பழகன், முதன்மைச் செயலர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகியோரும் பங்கேற்றனர். பொருளாளர் ஸ்டாலின், தன் மாமனார் ஜெயராமன் மறைந்ததால், நாகை மாவட்டம் திருவங்காடுக்குச் சென்றதால், நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 'இன்றும் தொடர்ந்து, வேட்பாளர் பட்டியல் தயாரிப்புப் பணி நடக்கும்' என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்டாலின் வந்ததும், பட்டியல் இறுதி செய்யப்பட்டு, மேயர் வேட்பாளர்கள் பெயர் நாளை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
- நமது சிறப்பு நிருபர் -


