/உள்ளூர் செய்திகள்/தேனி/வேட்பாளர்களின் பிரசார டிஜிடல் போர்டில் "ஹசாரே'வேட்பாளர்களின் பிரசார டிஜிடல் போர்டில் "ஹசாரே'
வேட்பாளர்களின் பிரசார டிஜிடல் போர்டில் "ஹசாரே'
வேட்பாளர்களின் பிரசார டிஜிடல் போர்டில் "ஹசாரே'
வேட்பாளர்களின் பிரசார டிஜிடல் போர்டில் "ஹசாரே'
ADDED : செப் 21, 2011 11:04 PM
தேனி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.இவர்கள் தங்கள் பிரசாரத்திற்கு, ஊழலுக்கு எதிராக போராடும் காந்தியவாதி அன்னஹசாரே, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படங்களை பயன்படுத்தி டிஜிடல் பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர்.ஹசாரேயை போல் ஊழலுக்கு எதிராக போராடவும், அவர் விரும்பும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்கவும் ஓட்டளியுங்கள் என வாக்காளர்களிடம் கேட்கின்றனர்.தேனி மாவட்டத்தில் இந்த விளம்பரங்களை வாக்காளர்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.