Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வீடியோ படக் காட்சியை பார்த்துவிழிப்புணர்வு பெற அழைப்பு

வீடியோ படக் காட்சியை பார்த்துவிழிப்புணர்வு பெற அழைப்பு

வீடியோ படக் காட்சியை பார்த்துவிழிப்புணர்வு பெற அழைப்பு

வீடியோ படக் காட்சியை பார்த்துவிழிப்புணர்வு பெற அழைப்பு

ADDED : ஆக 19, 2011 03:53 AM


Google News
விழுப்புரம்:தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஊராட்சி ஒன்றியங்களில் வீடியோ படக் காட்சி திரையிடப்படுகிறது.இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங் களில் தினம் இரு கிராமங்கள் வீதம் வீடியோ படக் காட்சி, வீடியோ வாகனம் மூலம் திரையிடப்படுகிறது.

இந்த வாகனம் தினமும் இரு படக் காட்சிகள் வீதம் ஒரு மாதத்திற்கு இரு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் சுழற்சி முறையில் திரையிடப்படுகிறது.இதில் தமிழக முதல்வர் பதவியேற்பு விழா, அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகள், பதவியேற்ற தினமே 7 திட்டங்களை நிறைவேற்ற கோப்புகளில் கையெழுத்திட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இந்த வீடியோ படக் காட்சிகளை பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வு பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us