ADDED : ஆக 22, 2011 10:50 PM
கிருமாம்பாக்கம் : கிருமாம்பாக்கம் ராஜிவ்காந்தி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நேற்றுமுன்தினம் நடந்தது.
கல்லூரி ஐ.டி., துறைத் தலைவர் பாலமுருகன் வரவேற்றார். முதல்வர் விஜகிருஷ்ண ரபாகா முன்னிலை வகித்தார். கல்லூரி நிர்வாகி பாஸ்கரன் தலைமை தாங்கி, முதலாமாண்டு வகுப்புகளைத் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் முதலாமாண்டு வகுப்பு ஆசிரியர்கள் அறிமுகம் செய்யப்பட்டு, அவர்களின் சிறப்பு குறித்து விளக்கப்பட்டது. கணிதத் துறை இணை பேராசிரியர் சம்பத் நன்றி கூறினார்.