/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/திருட்டு மின்சாரம் ரூ.52,865 அபராதம் வசூல்திருட்டு மின்சாரம் ரூ.52,865 அபராதம் வசூல்
திருட்டு மின்சாரம் ரூ.52,865 அபராதம் வசூல்
திருட்டு மின்சாரம் ரூ.52,865 அபராதம் வசூல்
திருட்டு மின்சாரம் ரூ.52,865 அபராதம் வசூல்
மத்தூர்: மத்தூர் அடுத்த சந்தூரில் வீட்டுக்கு வாங்கிய மின் இணைப்பில் இருந்து திருட்டுதனமாக ஒயர் இழுத்து கடைக்கு மின்சாரத்தை பயன்படுத்தி வந்ததை மின் திருட்டு தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்து 52 ஆயிரம் ரூபாய் அபாரத தொகையை வசூலித்தனர்.
மாதந்தோறும் ராஜா வீட்டில் உள்ள மின் மீட்டர் குறைந்த பட்ச அளவான 40 ரூபாய்க்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக மட்டுமே இருந்துள்ளது. ராஜா வீட்டில் 'டிவி', பிரிட்ஜ், வாசிங் மெஷின் ஆகிய பொருட்கள் பயன்படுத்துவதை அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சந்தேகமடைந்து தர்மபுரியில் உள்ள மின் திருட்டு தடுப்பு பிரினருக்கு தகவல் அளித்தனர். மின் திருட்டு தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ராஜா வீட்டில் திடீரென்று சென்று சோதனை நடத்தினர். அப்போது, ராஜா வீட்டில் உள்ள மின் மீட்டரில் முறைகேடு செய்து அருகில் உள்ள பேன்ஸி ஸ்டோருக்கு மின்சாரத்தை திருட்டு தனமாக பயன்படுத்தியது தெரிந்தது. இதன்படி ராஜா 5 ஆயிரத்து 292 யூனிட் மின்சாரத்தை திருட்டு தனமாக உபயோகித்தது தெரிந்தது அதிகாரிகள் இதற்காக 52 ஆயிரத்து 865 ரூபாய் அபராதமாக விதித்தனர். இதனையடுத்து ராஜா அபராத தொகையை கட்டினார்.


