PUBLISHED ON : செப் 16, 2011 12:00 AM
சேலம்: சேலத்தில் கட்டி முடிக்கப்பட்ட மருத்தவமனையை பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். சேலத்தில் 145 கோடி செலவில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களின்பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி சேலத்தில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். இதனைதொடர்ந்து ஆர்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.