
எதிர்க்கட்சிக்காரர்கள் பார்த்தால் என்னாகும்?
வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே, மோதல் ஏற்படுவதும், ஒருவரை ஒருவர், கடுமையாக தாக்கிப் பேசுவதும் வழக்கமான நிகழ்வு தான்.
முதல்வர் பிரித்விராஜ் சவான் முன்பாகவே, இந்த கலாட்டா ஜோராக அரங்கேறியது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரித்விராஜ், நொந்து போய்விட்டார். கூட்டம் முடிந்து, அனைவரும் வீட்டுக்கு கிளம்பும்போது கூட, இருவரின் சண்டை முடியவில்லை.முதல்வர் பிரித்விராஜ் சவானோ, 'கட்சியில் யாருமே, நம்மை ஒரு மனிதனாக மதிக்க மாட்டேன் என்கிறார்களே. இதை எதிர்க்கட்சிக்காரர்கள் பார்த்தால், என் நிலைமை என்னாகும்' என, விரக்தியுடன், கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினார்.
ராகுலுக்கு ஆதரவு எப்படி?பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று, சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஊழலுக்கு எதிராக நடக்கும் தொடர் போராட்டங்கள், காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக, அந்த கருத்துக் கணிப்பில் குறிப்பிட்டுள்ளது.இதைவிட, சுவாரசியமான ஒரு தகவலும், அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்., பொதுச் செயலர் ராகுலைப் பற்றிய தகவல் தான், அது. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக, காங்கிரசில் இருந்து, யாரை பிரதமராக தேர்வு செய்யலாம் என்ற கேள்விக்கு, 52 சதவீதம் பேர், 'சந்தேகமே இல்லை. ராகுல் தான்' என, உறுதியாக தெரிவித்துள்ளனராம்.
அதேநேரத்தில், ராகுலும், ஹசாரேவும், தேர்தலில் போட்டியிட்டால், யார் வெற்றி பெறுவார் என்ற கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் தான், ஆச்சர்யப்பட வைத்துள்ளது.அமேதியில் போட்டியிட்டால், ராகுலுக்கு தான் வெற்றி என, 50 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இங்கு, ஹசாரேவுக்கு 37 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இருவரும், டில்லியில் போட்டியிட்டால், ஹசாரேவுக்கு 66 சதவீதம் பேரும், ராகுலுக்கு 25 சதவீதம் பேரும், ஓட்டளிக்கப் போவதாக கூறியுள்ளனர். மகாராஷ்டிராவில் போட்டியிட்டால், ராகுலுக்கு, 33 சதவீதம் பேரும், ஹசாரேவுக்கு 60 சதவீதம் பேரும் ஓட்டுப் போடுவதாக தெரிவித்துள்ளனர்.இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள், காங்கிரஸ் கட்சியினருக்கு, கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ராகுலோ, இதையெல்லாம் பொருட்படுத்தாமல், உற்சாகமாகவே வலம் வருகிறார்.