Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கூட்டுறவு தேர்தல் நியாயமாக நடத்த தனி ஆணையம் அமைக்க வேண்டும்

கூட்டுறவு தேர்தல் நியாயமாக நடத்த தனி ஆணையம் அமைக்க வேண்டும்

கூட்டுறவு தேர்தல் நியாயமாக நடத்த தனி ஆணையம் அமைக்க வேண்டும்

கூட்டுறவு தேர்தல் நியாயமாக நடத்த தனி ஆணையம் அமைக்க வேண்டும்

ADDED : செப் 25, 2011 10:00 PM


Google News
விருதுநகர்: தமிழகத்தில் கூட்டுறவு தேர்தல்களை நடத்த, தனி ஆணையம் அமைக்க வேண்டும் என, கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விருதுநகரில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் கே.என். பழனி கூறுகையில், ''கூட்டுறவுத்துறையில் பணி நிலைத்திறன் அடிப்படையில் 600 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியினரால் வழங்கப்பட்ட அரசாணைகள் காரணமாக ஊழியர்களிடையே ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதை களைய வேண்டும். கூடுதல் பணியாக பணியாளர்களுக்கு தொடக்க கூட்டுறவு சங்க கண்காணிப்பு பணிகள் வழங்கப்படுகின்றன. இதில் தவறுகள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட அலுவலர் மீது குற்ற நடவடிக்கைகள் எடுப்பதை அரசு நிறுத்த வேண்டும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. குறிப்பாக விவசாய கடன்கள், ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்படுகின்றன. கூட்டுறவுத்துறை ஜனநாயக ரீதியில் செயல்பட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்த, தனி தேர்தல் ஆணையம் உள்ளது போல் கூட்டுறவுத்துறைக்கு தனி தேர்தல் ஆணையம் அமைக்க வேண்டும். கூட்டுறவு ஊழியர்கள் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும். தேர்தல் அலுவலர்களுக்கு மிரட்டல், கடத்தல் போன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க, தேர்தல் ஆணையம் அவசியமாக இருக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்,'' என்றார். அவருடன் மாநில பொது செயலாளர் ரத்தினம், பொருளார் துரை ஆகியோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us