காளஹஸ்தியில் ஜீப் மீது லாரி மோதிய விபத்து தமிழக இன்ஜினியர்கள் 4 பேர் உட்பட 5 பேர் பலி
காளஹஸ்தியில் ஜீப் மீது லாரி மோதிய விபத்து தமிழக இன்ஜினியர்கள் 4 பேர் உட்பட 5 பேர் பலி
காளஹஸ்தியில் ஜீப் மீது லாரி மோதிய விபத்து தமிழக இன்ஜினியர்கள் 4 பேர் உட்பட 5 பேர் பலி
ADDED : ஆக 08, 2011 02:14 AM

சென்னை:காளஹஸ்தி அருகே நேற்று காலை ஜீப் மீது லாரி மோதிய விபத்தில்,
தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் பலியாகினர். காயமடைந்த
மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த
ஜெயமூர்த்தி, 28, சதீஷ், 30, வசீம் ராஜா, 25, சதீஷ், 27, கார்த்திக், 27,
அசோக், 25 உட்பட ஏழு பேர், நேற்று முன்தினம் ரயில் மூலம் திருப்பதி
சென்றனர்.
திருப்பதியில் இரவு சாமி தரிசனம் செய்த பின், நேற்று அதிகாலை
திருப்பதியிலிருந்து, வாடகை ஜீப் மூலம் காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு
சென்றனர். திருப்பதியைச் சேர்ந்த சதீஷ், ஜீப்பை ஓட்டினார்.சித்தூர்
மாவட்டம், சீத்தாரம்பேட்டை அருகே ஜீப் வந்த போது, நெல்லூரிலிருந்து
பெங்களூருக்கு, தக்காளி ஏற்றி வந்த லாரி, ஜீப் மீது பயங்கரமாக மோதியது.
இதில், ஜீப்பில் இருந்த வசீம் ராஜா, ஜெயமூர்த்தி, சதீஷ், கார்த்திக், ஜீப்
டிரைவர் சதீஷ் ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.டிரைவர் சதீஷ்
தவிர, இறந்த மற்ற நான்கு பேரும் சென்னை டைடல் பார்க்கில் பணியாற்றி வந்த
பொறியாளர்கள். விபத்தில் காயமடைந்த மூன்று பேர், திருப்பதியில் உள்ள ரூயா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.


