/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மனதை "ரிலாக்ஸ்' ஆக வைத்திருங்கள் பட்டாசு தொழிலாளர்களுக்கு அறிவுரைமனதை "ரிலாக்ஸ்' ஆக வைத்திருங்கள் பட்டாசு தொழிலாளர்களுக்கு அறிவுரை
மனதை "ரிலாக்ஸ்' ஆக வைத்திருங்கள் பட்டாசு தொழிலாளர்களுக்கு அறிவுரை
மனதை "ரிலாக்ஸ்' ஆக வைத்திருங்கள் பட்டாசு தொழிலாளர்களுக்கு அறிவுரை
மனதை "ரிலாக்ஸ்' ஆக வைத்திருங்கள் பட்டாசு தொழிலாளர்களுக்கு அறிவுரை
ADDED : ஆக 02, 2011 11:35 PM
சிவகாசி : ''பட்டாசில் மருந்து கலவை செய்யும் தொழிலாளர் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்து கொள்ள வேண்டும்.
பிரச்னையுடன் வேலைக்கு வரக்கூடாது,'' என, தொழிற்சாலை துணை தலைமை ஆய்வாளர் போஸ் கூறினார். சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் போர்மேன்கள், ஆலை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் செல்வ சண்முகம், துணை தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். மதுரை தொழிற்சாலை துணைத்தலைமை ஆய்வாளர் (பதிவு) போஸ் பேசுகையில், ''பட்டாசு ஆலைகளில் 50 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் பார்வை, உடல் தகுதி சரியாக உள்ளதா என சரிபார்த்து வேலையில் சேர்க்க வேண்டும். 30 அறைகளுக்கு மேல் உள்ள பட்டாசு ஆலையில் கண்டிப்பாக கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டும். பட்டாசில் பயன்படுத்தும் பொருட்களின் வேதியில் பெயர்கள், அதன் தன்மையினை தொழிலாளர்கள் தெரிந்திருக்க வேண்டும். எந்த வகை பட்டாசுக்கு என்ன மருந்து கலக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பட்டாசு தயாரிப்பில் மருந்து கலவை பணி மிக முக்கியமானது. அதில் வேலை செய்பவர்கள் மனதை 'ரிலாக்ஸ்' ஆக வைத்து கொள்ள வேண்டும். பிரச்னையுடன் வேலைக்கு வரக்கூடாது'', என்றார். சிவகாசி தொழிற்சாலை துணை தலைமை ஆய்வாளர் பெரியசாமி, ஆய்வாளர் ரவிச்சந்திரன், மதுரை துணை தலைமை ஆய்வாளர் அப்பாவு சாம்ராஜ், ஆய்வாளர்கள் கதிர்வேல், உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், சந்திரா பேசினர்.