Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ரூ. 67.30 லட்ச மதிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரூ. 67.30 லட்ச மதிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரூ. 67.30 லட்ச மதிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரூ. 67.30 லட்ச மதிப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ADDED : ஆக 21, 2011 02:05 AM


Google News

காரிமங்கலம்: காரிமங்கலம் பஞ்சாயத்து யூனியன் திம்மராயனஅள்ளி பஞ்சாயத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 67 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கலெக்டர் லில்லி தலைமை வகித்து பேசியதாவது: இயற்கையோடு இணைந்து வாழ்கின்ற இக்கிராமத்தில் நடக்கும் முகாமில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இம்முகாமில் பொது நல மனு, தனி நபர் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. பொது நல மனுக்களை பொருத்த வரையில் ஒரு கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை உள்ளடக்கியது. சாலை வசதி, பஸ் வசதி, கல்வி வசதி, மயான வசத, குடிநீர் வசதி போன்ற எண்ணற்ற பல வசதிகளை கொண்டது.



தனி நபர் மனுக்கள் புதிய ரேஷன் கார்டு, பட்டா பெயர் மாற்றம், திருமண நிதி உதவி, முதியோர் உதித்தொகை பேன்ற கோரிக்கைகள் உள்ளன. இரு பிரிவு கோரிக்கை மனுக்களையும் பரிசீலனை செய்து உரிய தீர்வு காணப்படும். அனைத்து துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில் கூடும் இது போன்ற முகாம்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் பொது மக்களாகிய நீங்கள் அறிந்து பயன்பெற வேண்டும். நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு கோரிக்கை மனுக்களும் அரசு விதிகளுக்கு உட்பட்டு இருக்குமானால் அரசு அலுவலர்கள் பரிசீலித்து உங்களுடைய மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.



சமூக பாதுகாப்பு திட்டதின் மூலம் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை, விவசாயிகள் கூலி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட 55 பேர்களுக்கு 65 லட்சத்து 5 ஆயிரத்துக்கான நிதி உதவிகளும், சமூக நலத்துறை மூலம் ஒன்பது பேருக்கு 25,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. வேளாண் துறை மூலம் துவரை சாகுபடிக்கான செயல் விளக்கம், மக்காசோளம், மினிகிட், சாமை செயல் விளக்கம் அமைக்க ஆறு பேருக்கும், தோட்டக்கலை துறை மூலம் மூன்று பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டன. சப்-கலெக்டர் மரியம் சாதிக், காரிமங்கலம் யூனியன் சேர்மன் சந்திரிகாமனோகரன், மாவட்ட கவுன்சிலர் தனக்கோடி, ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், ஜிட்டாண்டஅள்ளி பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us