/உள்ளூர் செய்திகள்/மதுரை/காவிரி குடிநீர், பாதாள சாக்கடை : அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன்காவிரி குடிநீர், பாதாள சாக்கடை : அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன்
காவிரி குடிநீர், பாதாள சாக்கடை : அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன்
காவிரி குடிநீர், பாதாள சாக்கடை : அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன்
காவிரி குடிநீர், பாதாள சாக்கடை : அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன்
ADDED : அக் 04, 2011 12:44 AM
மேலூர் : ''மேலூரில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க காவிரி கூட்டு குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்,'' என, அ.தி.மு.க., மேலூர் நகராட்சி தலைவர் வேட்பாளர் சரவணன் உறுதி கூறினார்.
இவர் மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ., தியாகி பெரியகருப்பன அம்பலத்தின் பேரன். நகராட்சியில் 24 வது வார்டு கவுன்சிலராக மூன்று முறை இருந்துள்ளார். துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சரவணன் கூறியதாவது: குடிநீர், சாலை, சாக்கடை, கழிப்பிடம், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் சாமி எம்.எல்.ஏ., நிதியுதவியுடன் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சி இருந்ததால் அந்த திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன.
காவிரி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்று வட்டச் சாலை, நகரின் முக்கிய இடங்களில் இலவச கழிப்பிட வசதிகள், திருமண மண்டபங்கள், அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் வசதிகள், உள் விளையாட்டு அரங்கு, காந்திஜி பூங்கா சீரமைப்பு போன்ற திட்டங்களை எம்.எல்.ஏ., நிதியுதவியுடன் பெற்று கொடுக்கப்படும். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மேலூர் முன்மாதிரி நகராட்சியாக மாற்றப்படும், என்றார்.


