Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த நிதியுதவி

அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த நிதியுதவி

அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த நிதியுதவி

அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த நிதியுதவி

ADDED : செப் 08, 2011 12:06 AM


Google News

காஞ்சிபுரம் : அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்திட, நிதியுதவி பெற விரும்பும், இளம் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை கீழ் இயங்கும், இயல், இசை, நாடக மனறம் மூலமாக, இளம் கலைஞர்களுக்கு, அரசு சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்திட, நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பரதநாட்டியம், வாய்பாட்டு, கதாகலாட்சேபம், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்யம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற இசைக்கருவி கலைஞர்களுக்கும், பக்கவாத்யங்களான வயலின், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சின், கொன்னக்கோல், ஆகியப் பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு, வருடத்திற்கு மூன்று கலை நிகழ்ச்சிகள் நடத்திட நிதியுதவி அளிக்கப்படுகிறது.கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு, குரலிசை, புல்லாங்குழல், ஜலதரங்கம் குழுவிற்கு 2,800 ரூபாய், வயலின், வீணை, கோட்டுவாத்யம் குழுவிற்கு 1,950 ரூபாய், கதாகலாட்சேபம், நாதசுரம், கிளார்öட், கிதார் குழுவிற்கு 4,000 ரூபாய், மாண்டலின், சாக்சபோன் குழுவிற்கு 3,000 ரூபாய், பரதநாட்டிய குழுவிற்கு 5,000 ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படும்.இதைப் பெற விரும்பும் கலைஞர்கள் 18 வயதிலிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஏற்கனவே, இத்திட்டத்தில் பயன்பெற்றோருக்கு, இப்பிரிவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.கடிதம் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவோர், சுய முகவரியிட்ட உறையில், ஐந்து ரூபாய்க்கான தபால் தலை ஒட்டி, உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பொன்னி, 31, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். அதே அலுவலகத்திற்கு, நேரில் சென்றும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் 30ம் தேதியிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ, மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாய்ப்பை காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த, இளம் கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என கலை பண்பாட்டுத் துறை, காஞ்சிபுரம் மண்டல உதவி இயக்குநர் ஹேமநாதன் தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us