/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் : இடிந்தகரையில் மீனவர்கள் உண்ணாவிரதம்கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் : இடிந்தகரையில் மீனவர்கள் உண்ணாவிரதம்
கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் : இடிந்தகரையில் மீனவர்கள் உண்ணாவிரதம்
கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் : இடிந்தகரையில் மீனவர்கள் உண்ணாவிரதம்
கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் : இடிந்தகரையில் மீனவர்கள் உண்ணாவிரதம்
வள்ளியூர் : கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நெல்லை மாவட்ட கடற்கரை கிராம மக்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அதன்படி கடற்கரை கிராமங்களை சேர்ந்தவர் இடிந்தகரை புனித லூர்து மாதா ஆலயம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்து 200 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கடற்கரை கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைத்து வந்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற மீனவ மககள் கூறியதாவது: கூடன்குளம் அணு உலைக்கு அருகில் 1500 மீட்டர் சுற்றளவில் யாரும் மீன்பிடிக்க கூடாது என்று கடந்தாண்டு ஒரு அரசு கூட்டம் போட்டுள்ளனர். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். அணு உலை மூலம் மின் உற்பத்தி தொடங்கும் போது 16 கிலோ மீட்டர் தொலைவிற்கு மீன் பிடிக்ககூடாது என்று சொல்வார்கள். மீனவர்கள் வாழ்வாதாரமே மீன் பிடித்தல்தான். அதனை தடைசெய்யும் போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் அணு உலை மூலம் கதிர்வீச்சு ஏற்பட்டால் பாதிப்பு பெருமளவில் ஏற்படும். அணு உலையை மூட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கூடன்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரை புனித லூர்து மாதா ஆலயம் முன் கறுப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அனைத்து தெருக்களிலும் இருபக்கமும் கறுப்பு கொடி வரிசையாக கட்டப்பட்டிருந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களை சேர்ந்த அணு உலை எதிர்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் இடிந்தகரையில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது.