மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஸ்டிரைக்
மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஸ்டிரைக்
மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஸ்டிரைக்
ADDED : ஆக 17, 2011 01:18 AM
சென்னை : தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க பொது செயலர் ரமேஷ் சுந்தர் கூறியதாவது: உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் அதிக விலையில் விற்கப்பட்டு வருவதைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது.
மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு பணி உத்தரவு, வேலை நேரம் முறைப்படுத்தப்படாததால் வேலைப் பளுவும் அதிகரித்து வருகிறது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக., 17ல் (இன்று) நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடக்கிறது, என்றார்.