ADDED : ஜூலை 29, 2011 11:48 PM
தா.பேட்டை : தா.பேட்டை யூனியன் சூரம்பட்டி பஞ்சாயத்தில் சிறப்பு மனுநீதி முகாம் நிறைவு விழா சமுதாய கூடத்தில் நடந்தது.மண்டல துணை தாசில்தார் செல்வராஜ் வரவேற்றார்.
முசிறி ஆர்.டி.ஓ., ஜெயசீலா தலைமை வகித்தார். பஞ்., தலைவர் ராமச்சந்திரன், தாசில்தார் சாவித்திரி முன்னிலை வகித்தனர்.முகாமில், பட்டா மாற்றம் செய்து பட்டா நகல் 11 பேருக்கும், விதவை உதவி தொகை ஐந்து பேர் உட்பட 16 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. முகாமில் மக்களிடமிருந்து 31 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 11 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.