/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மீன்பிடித்து,எருமை கழுவி பொதுமக்கள் போராட்டம்மீன்பிடித்து,எருமை கழுவி பொதுமக்கள் போராட்டம்
மீன்பிடித்து,எருமை கழுவி பொதுமக்கள் போராட்டம்
மீன்பிடித்து,எருமை கழுவி பொதுமக்கள் போராட்டம்
மீன்பிடித்து,எருமை கழுவி பொதுமக்கள் போராட்டம்
ADDED : ஆக 11, 2011 10:55 PM
காரைக்குடி : காரைக்குடி மகர்நோம்பு பொட்டலை சீரமைக்க கோரி, தேங்கிய நீரில் மீன்பிடித்தும், மாடு கழுவியும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நகரின் மையப்பகுதியில், அமைந்துள்ள மகர்நோம்பு பொட்டலில் பழமையான காந்தி சிலை உள்ளது. இந்த பகுதியில் கட்சி சார்பில் அடிக்கடி பொதுக்கூட்டம், சர்க்கஸ், பொருட்காட்சி போன்றவை நடத்தப்படுவது வழக்கம். பொட்டலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஊரணி கழிவு ஆங்காங்கே கொட்டப்பட்டது. காலப்போக்கில், திட்டு திட்டாக மண் மேடுகளாக காட்சியளிக்கின்றன. தவிர, சமீபத்தில் பெய்த மழைக்கு இந்த இடத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து இடையூறு, கொசுத் தொல்லையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதை கண்டிக்கும் வகையில், நேற்று அப்பகுதி மக்கள் தேங்கியுள்ள நீரில் மீன் பிடித்தும், மாடுகளை கழுவியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.