ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்
ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்
ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்
ADDED : ஜூலை 19, 2011 12:25 AM

சென்னை : முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
சமச்சீர் கல்வி வழக்கில், சென்னை ஐகோர்ட் நேற்று காலை தீர்ப்பு வழங்கியது. நடப்பு கல்வியாண்டிலேயே, ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்கு, 22ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட ஐகோர்ட், தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி சட்டத் திருத்தத்தையும் ரத்து செய்தது.
இந்நிலையில், பிற்பகலில் தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், அனைத்துத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சமச்சீர் கல்வி வழக்கில், ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முதல்வர் விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 4ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.