Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கி.கிரியில் மூலிகை கண்காட்சி

கி.கிரியில் மூலிகை கண்காட்சி

கி.கிரியில் மூலிகை கண்காட்சி

கி.கிரியில் மூலிகை கண்காட்சி

ADDED : ஜூலை 28, 2011 01:55 AM


Google News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இயற்கை தாவரங்களின் மூலிகை பண்பு அறிந்து கொள்ளம் வகையில் சிறப்பு மூலிகை கண்காட்சி கடந்த 26ம் தேதி துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.

கண்காட்சி துவக்க விழாவுக்கு, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அரசு தலைமை மருத்துவனை சித்தா பிரிவு உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் மஞ்சுஹேமமாலினி கண்காட்சியை துவக்கி வைத்தார். குப்பை மேனி, வசம்பு, பொடுதலை, நித்யகல்யாணி, துளசி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, சிரியா நங்கை, முடக்கற்றான், மிளகாய் பூன்டு, செம்பருத்தி, கீழாநெல்லி உள்ளிட்ட 90 வகை மூலிகை செடிகளும், 21 அட்டை படங்களும், 50 சித்த மருந்துகளும் விளக்கங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை அருங்காட்சியக தொழில் நுட்ப உதவியாளர் அசோகன் மற்றும் பணியாளர்கள் திருவள்ளுவன், கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். தினம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us