Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வண்ணார்பேட்டையில் சிடிக்கள் கண்காட்சி துவக்க விழா

வண்ணார்பேட்டையில் சிடிக்கள் கண்காட்சி துவக்க விழா

வண்ணார்பேட்டையில் சிடிக்கள் கண்காட்சி துவக்க விழா

வண்ணார்பேட்டையில் சிடிக்கள் கண்காட்சி துவக்க விழா

ADDED : ஆக 28, 2011 01:12 AM


Google News

திருநெல்வேலி : பெப்பில்ஸ் நிறுவனம் சார்பில் கல்வி சிடிக்கள், டிவிடிக்கள் கண்காட்சி துவக்க விழா வண்ணார்பேட்டை சகுந்தலா ஹோட்டலில் நடந்தது.

பெப்பில்ஸ் நிறுவனம் சார்பில் கல்வி சிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் கண்காட்சி வண்ணார்பேட்டை ஹோட்டல் சகுந்தலாவில் 27ம்தேதி முதல் வரும் செப்டம்பர் 11ம்தேதி வரை நடக்கிறது.

கண்காட்சியின் துவக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவில் நெல்லை டாடா கோல்டு பிளஸ் ÷ஷாரூம் நிர்வாக இயக்குநர் ஹரி கிருஷ்ணன் கண்காட்சியை திறந்துவைத்து சிடிக்களை வெளியிட, கண் காட்சி ஒருங்கிணைப்பாளர் புருனோ ராஜா பெற்றுக் கொண்டார். இதில் நாகர்கோவில் கண்காட்சி பொறுப்பாளர் சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில் 1,2,3,6, 7 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதம், இயற்பியல்,வேதியியில், உயிரியல் சமச்சீர் பாடபுத்தகங்களின் சிடிக்கள் மற்றும் பிளஸ் 2 பாடப்புத்தகங்களின் சிடிக்கள், ஒரு மார்க் வினா வங்கி போன்றவை இடம் பெற்றுள்ளன.

இதுதவிர ஐஐடி., ஏஐஇஇஇ., யுபிஎஸ்சி., டிஎன்பிஎஸ்சி., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான சிடிக்கள், ஆங்கில இலக்கணத்தை எளிதில் கற்பதற்கான சிடிக்கள், மழலையர்களின் நர்சரி பாடல்கள், காய்கறிகள், விலங்குகள், பறவைகள், பழங்கள் பற்றிய பாடல்கள், தெனாலிராமன், பீர்பால் கதைகள், நல்லொழுக்க கதைகள், மகாத்மா காந்தி, விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு, பகவத் கீதை, பைபிள், ராமாயணம், மகாபாரத கதைகள், கோயில்களின் விவரம், விளையாட்டு, ஜோதிடம், அறிவியல் செயல் முறை விளக்கம், இந்திய சுற்றுலா தளங்கள், நடனம் பயிலுதல், போட்டி தேர்வு, சுய முன்னேற்றம், மேலாண்மை உட்பட ஏராளமான தலைப்புகளில் சுமார் 5 ஆயிரம் சிடி மற்றும் டிவிடிக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் குறைந்தபட்சம் 59 ரூபாய் முதல் அதிகபட்சம் 2ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினும் பயன்படுத்தும் வகையில் கண்காட்சியில் சிடிக்கள் மற்றும் டிவிடிக்களுக்கு 20 முதல் 50சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர பள்ளி அடையாள அட்டையுடன் வந்து பாட சிடிகள் வாங்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 5சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us