/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சாலையோரத்தை பாராக பயன்படுத்தும் "குடி'மகன்கள் : கடையம் பகுதி மக்கள் அவதிசாலையோரத்தை பாராக பயன்படுத்தும் "குடி'மகன்கள் : கடையம் பகுதி மக்கள் அவதி
சாலையோரத்தை பாராக பயன்படுத்தும் "குடி'மகன்கள் : கடையம் பகுதி மக்கள் அவதி
சாலையோரத்தை பாராக பயன்படுத்தும் "குடி'மகன்கள் : கடையம் பகுதி மக்கள் அவதி
சாலையோரத்தை பாராக பயன்படுத்தும் "குடி'மகன்கள் : கடையம் பகுதி மக்கள் அவதி
ADDED : ஆக 01, 2011 01:59 AM
ஆழ்வார்குறிச்சி : கடையம் பகுதியில் சாலையோர திறந்தவெளி பாரை தடை செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடையம், திருமலையப்பபுரம், முதலியார்பட்டி, பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர் ஆகிய ஊர்களின் மெயின்ரோடு வழியாக விடுமுறை நாட்களில் குற்றாலத்திற்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
குற்றாலத்தில் இருந்து அகஸ்தியர் அருவி, பாபநாசம் போன்வற்றிற்கும் இந்த வழியாக தான் கார், வேன்களில் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.இவ்வாறு அவர்கள் செல்லும்போது ஆம்பூர் மற்றும் ஆழ்வார்குறிச்சிக்கு நடுவே உள்ள இடைப்பகுதிகளிலும், ஆழ்வார்குறிச்சி - பொட்டல்புதூர் வழியில் ஒற்றை மாமரத்து நிழலிலும் மற்றும் கடையம் ஐய்யனார் குளம் அருகேயும், கடையம் - மாதாபுரம் வழியிலுள்ள மரங்களின் நிழலிலும் சுற்றுலா பயணிகள் தங்கள் கார்களை சாலை ஓரத்திலேயே நிறுத்திவிட்டு மிகவும் சர்வசாதாரணமாக பட்டப்பகலில் ரோட்டின் அருகேயே இருந்து மது அருந்துகின்றனர்.திறந்தவெளி பாராக பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் சாலையில் வருவோர், போவோரை பற்றி கவலைப்படுவதில்லை. மேலும் பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டு விடுகின்றனர். இதனால் தினசரி அவ்வழியே செல்லும் பயணிகளுக்கு கடும் இடைஞ்சல் ஏற்படுகிறது. மேலும் அரைகுறை ஆடைகளுடன் மது அருந்திவிட்டு ரோட்டில் போவோர் வருவோரிடம் தேவையில்லாமல் கைகாட்டுவது, கூச்சலிடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.எனவே இதுபோன்று சாலையோரங்களில் திறந்தவெளி பாராக பயன்படுத்தும் சுற்றுலா பயணிகளை எச்சரித்து போலீசார் அனுப்ப வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.