/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வி.கே.புரத்தில் வியாபாரிகள்சங்க மகாசபை கூட்டம்வி.கே.புரத்தில் வியாபாரிகள்சங்க மகாசபை கூட்டம்
வி.கே.புரத்தில் வியாபாரிகள்சங்க மகாசபை கூட்டம்
வி.கே.புரத்தில் வியாபாரிகள்சங்க மகாசபை கூட்டம்
வி.கே.புரத்தில் வியாபாரிகள்சங்க மகாசபை கூட்டம்
ADDED : ஆக 26, 2011 01:36 AM
விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரத்தில் பொது வியாபாரிகள் சங்க 56வது
மகாசபை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு சங்க தலைவர் ஜவஹர் தலைமை வகித்தார்.
சிவன், தங்கசாமிநாடார், மனோகரன், கனகராஜ், ஹரிகரன் முன்னிலை வகித்தனர்.
சங்க செயலாளர் ஐயல்சாமி வரவேற்றார். சங்க ஆண்டறிக்கையை கிருஷ்ணன்
வாசித்தார்.
கூட்டத்தில் பாபநாசம் கோயில் சுற்றுச்சூழல், குடிநீர் மாசுபடுவதை தடுக்க
நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தை கேட்டுக்
கொள்வது, தென்காசி - நெல்லை ரயில்வே பணியை விரைவாக முடித்து கொடுக்க தென்னக
ரயில்வேயை கேட்டுக் கொள்வது, 60 வயது நிரம்பிய முதியவர்களுக்கு இலவச
பஸ்பாஸ் திட்டத்தை விரைவாக மக்களுக்கு வழங்க அரசை கேட்டுக் கொள்வது,
திருவனந்தபரம் - பாபநாசம் மலைவழிச்சாலை அமைய துரித நடவடிக்கை எடுக்க தொகுதி
எம்.பி.,யை கேட்டுக் கொள்வது.ஆடி, அமாவாசை விழாவிற்கு வருகை தந்த
பக்தர்களுக்கு சிறப்பாக கழிப்பிடம், மருத்துவம், போக்குவரத்து வசதி செய்து
கொடுத்த மாவட்ட கலெக்டருக்கும், அறநிலையத்துறைக்கும் சங்கத்தின் சார்பாக
நன்றி தெரிவித்துக் கொள்வது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2 தேர்வில் முதல் மதிப்பெண்
பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆலோசகர் வள்ளுவராஜ், வர்த்தக சங்க
மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர்
ராமகிருஷ்ணன், துணை செயலாளர் விநாயகம், முருகன், சங்க நிர்வாக கமிட்டி
உறுப்பினர் முருகேசன், வெலிங்டன், தங்கப்பாண்டி, அய்யாத்துரை, அய்யப்பன்,
பழனியப்பன், செந்தில்குமார், சங்கரபாண்டியன், உதவியாளர் ரெங்கநாதன் மற்றும்
பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.நிர்வாக கமிட்டி
உறுப்பினர் பெருமாள் நன்றி கூறினார்.