/உள்ளூர் செய்திகள்/திருச்சி/நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம்அரியமங்கலம் கோட்டத்தில் தீவிரம்நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம்அரியமங்கலம் கோட்டத்தில் தீவிரம்
நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம்அரியமங்கலம் கோட்டத்தில் தீவிரம்
நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம்அரியமங்கலம் கோட்டத்தில் தீவிரம்
நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம்அரியமங்கலம் கோட்டத்தில் தீவிரம்
ADDED : செப் 08, 2011 12:05 AM
திருச்சி: அரியமங்கலம் கோட்டத்தில் நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம் மூலம்
பொது மக்களிடம் வரி வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.திருச்சி
மாநகராட்சியில் வரி வசூல் பணியினை துரிதப்படுத்தும் நோக்கத்துடனும், பொது
மக்களின் வசதிக்காகவும் நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம் ஒவ்வொரு கோட்டமாக
நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம் மூலம் வரி வசூல் பணி மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.இந்த வாரம் மாநகராட்சியின் நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம் நேற்று
காலை 9 மணி முதல் ஜெயில் தெரு, கால்நடை மருத்துவமனை அருகில் வரகனேரியில்
பொது மக்களிடம் இருந்து வரி வசூல் பணியை மேற்கொண்டது. அப்பகுதி பொது மக்கள்
மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள வசதியை பயன்படுத்தி வரியை
செலுத்தினர்.இன்று(8ம் தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரை 22வது
வார்டுக்கு உட்பட்ட இருதயபுரம் மருத்துவமனை, 23வது வார்டுக்கு உட்பட்ட
காஜா பேட்டை வாட்டர் டேங்க் அருகில் 12 மணி முதல் 2 மணி வரை, 24வது
வார்டில் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை எடத்தெரு காளியம்மன் கோவில் தெரு
அருகில் வாகனம் நிறுத்தப்படுகிறது.
நாளை(9ம் தேதி) வெள்ளி காலை 10 மணி முதல்
12 மணி வரை 25 வது வார்டுக்கு உட்பட்ட துரைசாமி புரம் 4வது தெரு,
சின்னகண்ணம்மாள் திருமண மண்டபம், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை 26 வது
வார்டுக்கு உட்பட்ட முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவில் வரி
வசூல் வாகனம் நிறுத்தப்படுகிறது. சனி (10ம் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி
வரை 27வது வார்டுக்கு உட்பட்ட சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு, மதியம் 2
மணி முதல் மாலை 4 மணி வரை 33வது வார்டு பகுதியான ஹணிபா காலனி,
சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் நடமாடும் நேரடி வரிவசூல் வாகனம் மூலம்
பொது மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய எந்த வரியானாலும் செலுத்தி
ரசீது பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.