/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஒரே வார்டில் இருவருக்கு காங்., பி - பாம் குழப்பம் நீடித்ததால் சுயேச்சை சின்னம் ஒதுக்கீடுஒரே வார்டில் இருவருக்கு காங்., பி - பாம் குழப்பம் நீடித்ததால் சுயேச்சை சின்னம் ஒதுக்கீடு
ஒரே வார்டில் இருவருக்கு காங்., பி - பாம் குழப்பம் நீடித்ததால் சுயேச்சை சின்னம் ஒதுக்கீடு
ஒரே வார்டில் இருவருக்கு காங்., பி - பாம் குழப்பம் நீடித்ததால் சுயேச்சை சின்னம் ஒதுக்கீடு
ஒரே வார்டில் இருவருக்கு காங்., பி - பாம் குழப்பம் நீடித்ததால் சுயேச்சை சின்னம் ஒதுக்கீடு
ADDED : அக் 05, 2011 12:10 AM
மார்த்தாண்டம் : மேல்புறம் மாவட்ட பஞ்., வார்டு உட்பட இரண்டு டவுன் பஞ்., களில் காங்., சார்பில் கை சின்னம் கேட்டு இரண்டு பேர் விண்ணப்பித்ததால் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் இருவருக்கும் சுயேச்சை சின்னம் ஒதுக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. குமரி மாவட்டத்தில் காங்., சார்பில் சீட் கேட்டு பலர் விண்ணப்பித்தனர். இதில் பெரும்பாலானோருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் குழப்பமான சூழ்நிலை நிலவியது. மேல்புறம் பஞ்., யூனியனில் மாவட்ட பஞ்., வார்டு உறுப்பினருக்கு காங்., சார்பில் வக்கீல் சாலின் மற்றும் மக்கள் காவல்படை தலைவர் சேம்கிறிஸ்துகுமார் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான நேற்று இதில் ஒரு மனு வாபஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை இரண்டு பேரும் கை சின்னம் கேட்டு 'பி' பாம் கொடுத்தனர். இதனால் குழப்பம் நிலவியது. தேர்தல் அதிகாரி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பஞ்., யூனியன் வளாகம் பரபரப்படைந்தது. இதனை தொடர்ந்து இருவரும் சுயேச்சையாக கருதப்பட்டு சேம்கிறிஸ்துகுமாருக்கு கிரிக்கெட் பேட் சின்னமும், சாலினுக்கு பஸ் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கை சின்னம் ஒதுக்கப்படாததால் சாலின் இதை ஏற்க மறுத்து கையெழுத்து போடாமல் சென்றார். பஞ்., யூனியன் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.பாகோடு பஞ்., : பாகோடு பஞ்., சில் காங்., சார்பில் சீட் கேட்டு முன்னாள் தலைவர் மோகன்தாஸ், கவுன்சிலர் பால்ராஜ், இளைஞர் காங்., கை சேர்ந்த சுஜித்டேனியல் ஆகியோர் விருப்பமனு கொடுத்திருந்தனர். முதலாவதாக மோகன்தாஸ் தேர்தல் அதிகாரியிடம் 'பி' பாம் கொடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று சுஜித்டேனியல் கை சின்னம் கேட்டு 'பி' பாம் கொடுத்தார். இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு பேருக்கும் சுயேச்சை சின்னம் ஒதுக்கப்பட்டது. சுஜித்டேனியலுக்கு மட்டை சின்னமும், மோகன்தாசுக்கு கைக்கடிகாரம் சின்னமும் ஒதுக்கப்பட்டது.இது குறித்து விஜயதரணி எம்.எல்.ஏ., கூறியதாவது: பாகோடு, களியக்காவிளை பஞ்., மற்றும் மாவட்ட பஞ்., ஒன்றாவது வார்டில் மாற்று கட்சியின் தூண்டுதலில் டூப்ளிக்கேட் 'பி' பாம் கொடுத்துள்ளனர். அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு கலெக்டரிடம் நேற்று காலையிலேயே லிஸ்ட் கொடுத்தோம். ஆனால் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை நாங்கள் ஏற்று கொள்ளமாட்டோம். இவ்வாறு விஜயதரணி எம்.எல்.ஏ., கூறினார்.


