யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம்
யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம்
யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம்
ADDED : ஆக 30, 2011 11:28 PM

சென்னை:'கோவில் யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் திட்டம், இந்தாண்டு முதல், மீண்டும் செயல்படுத்தப்படும்' என, அமைச்சர் சண்முகநாதன் அறிவித்துள்ளார்.அறநிலையத்துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து, அமைச்சர் சண்முகநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:கோவில் மூலம், ஏழை, எளிய மக்கள் நடத்தும் திருமணத்திற்கு, அரை சவரன் தாலியுடன், சீர்வரிசைக்காக வழங்கப்படும், 5,500 ரூபாய், 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். நடப்பாண்டில், 1,006 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும்.முந்தைய ஆட்சியில் நிறுத்தப்பட்ட, 'யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்' திட்டம், கோவில் மடங்களுக்கு சொந்தமான, 45 யானைகளுக்கு இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். கோவிலுக்கு இரண்டு யானைகள் நன்கொடையாக வழங்கவும், 10 லட்ச ரூபாய் பராமரிப்பு வைப்பு நிதி செலுத்த வேண்டுமென, நிபந்தனை தளர்த்தப்படும். அதன்படி, இரண்டு யானைகளுக்குப் பதிலாக ஒரு யானை நன்கொடையாக வழங்கவும், பிற நன்கொடையாளர் மூலம், 10 லட்சம் பராமரிப்புத் தொகை நன்கொடையாக பெறப்படும்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 1,586 கோவில்களுக்கு சொந்தமான, 2,359 குளங்களில், 1,068 குளங்கள் உள்ளாட்சிகள் மூலம் சீரமைத்து, மழைநீர் சேகரிப்புத் திட்டம் நிறைவேற்றப்படும். கோவில் உபரி நிதியிலிருந்து, கூடுதல் ஆணையர் முதல், சரக ஆய்வாளர் வரை, 873 பேருக்கு, 'லேப்-டாப்' வழங்கப்படும். கோவில்களில், சுற்றுச்சூழல் காத்திடும் வகையில், பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் தவிர்க்கப்படும். பிரசாதப் பொருட்கள் துணி, காகிதப்பைகள், மூங்கில், பாக்கு மட்டை தட்டுகளில் தரப்படும்.இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.


