ஸ்வான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய அரசு முடிவு
ஸ்வான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய அரசு முடிவு
ஸ்வான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய அரசு முடிவு

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில், ஸ்வான் தொலைத்தொடர்பு நிறுவனம் பயனடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிறுவனம், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஸ்வான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட, 13 யு.ஏ.எஸ்., உரிமங்களை ரத்து செய்யலாமா என்பது குறித்து, மத்திய தொலைத்தொடர்புத் துறை, விசாரணை நடத்தி வந்தது.சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், தொலைத்தொடர்பு உரிமம் பெறுவதற்கான தகுதியை, ஸ்வான் நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை என, கூறப்பட்டது. இதைத் தெடார்ந்து, ஸ்வான் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய, தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திடம், தொலைத்தொடர்புத் துறை சார்பில் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.டி.எச்., நிறுவனங்களுக்கு வலை:


