/உள்ளூர் செய்திகள்/திருச்சி/துறையூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் சிக்கியது கலெக்டர் கார்: தீர்வு எப்போது?துறையூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் சிக்கியது கலெக்டர் கார்: தீர்வு எப்போது?
துறையூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் சிக்கியது கலெக்டர் கார்: தீர்வு எப்போது?
துறையூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் சிக்கியது கலெக்டர் கார்: தீர்வு எப்போது?
துறையூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் சிக்கியது கலெக்டர் கார்: தீர்வு எப்போது?
ADDED : ஜூலை 29, 2011 11:48 PM
துறையூர் : துறையூர் நகர போக்குவரத்து நெரிசலில் கலெக்டரின் சிக்கி தவித்தது போலீஸார் மத்தியில் பரபரபப்பை ஏற்படுத்தியது.திருச்சி மாவட்டம் துறையூர் நகரில், 'பீக் ஹவர்ஸ்' எனும் நெருக்கடியான நேரம் மட்டுமல்லாமல், எப்போதுமே வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதைபோக்க போலீஸ்துறை மற்றும் பிற அரசுத்துறை கண்டிப்பான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.இதுகுறித்து செய்தி வெளியாகும்போது கலெக்டர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை தந்து சமாளிக்கின்றனர்.வாகன நெரிசல் தீர்வுக்காக பெயரளவில் ஆக்ரமிப்புகளை அகற்றி கண்துடைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதிமுறை மீறி கட்டிய கட்டிடங்கள், பார்க்கிங் வசதியற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை இல்லை.வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில்லை. வாகனங்கள் சாலையோரத்தில் ஆங்காங்கே கடை முன் நிறுத்தி செல்வதால் எப்போதும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்சனையை தீர்க்க எந்த அரசுத்துறை அதிகாரியும் முயற்சிப்பதில்லை.இதனால் வாகன நெரிசல் பிரச்சனையில் சிக்கி துறையூர் பகுதி மக்கள் மூச்சு மூட்ட வேண்டியுள்ளது. துறையூர் நகரில் பஸ் ஸ்டாண்டில் இருந்து, பெரம்பலூர் ரோடு வரை எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த இடத்தில் எந்த வி.ஐ.பி., வாகனம் வந்தாலும், ஆம்புலன்ஸ் வந்தாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தான் செல்லவேண்டும் என்பது எழுதப்படாத விதி.கடந்த 20ம் தேதி பச்சமலை செல்ல திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, ஆர்.டி.ஓ., ஜெயஷீலா ஆகியோரின் வாகனங்கள் காலை 10.50 மணிக்கு திருச்சி ரோட்டில் சென்றது. ஸ்டேட் பாங்கிலிருந்து மூவரது வாகனமும் நெரிசலில் சிக்கித் தவித்தது. பெரம்பலூர் ரோடு வளைவு வரை நெரிசலில் 10 நிமிடமாக ஊர்ந்தே சென்றது.கலெக்டர் வருகைக்காக ஒரு எஸ்.ஐ., மற்றும் போலீஸார் வாகனத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கலெக்டர் வருகையின் போதே இப்படி நிலை என்றால், மற்ற நாட்களில் துறையூரில் போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கும்?.'இதற்கு நிரந்தர தீர்வு கிடை க்க மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று துறையூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.