/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை டவுனில் நவராத்திரி தசரா விழா "சக்தி தரிசனம்' கலந்துரையாடல் கூட்டம்நெல்லை டவுனில் நவராத்திரி தசரா விழா "சக்தி தரிசனம்' கலந்துரையாடல் கூட்டம்
நெல்லை டவுனில் நவராத்திரி தசரா விழா "சக்தி தரிசனம்' கலந்துரையாடல் கூட்டம்
நெல்லை டவுனில் நவராத்திரி தசரா விழா "சக்தி தரிசனம்' கலந்துரையாடல் கூட்டம்
நெல்லை டவுனில் நவராத்திரி தசரா விழா "சக்தி தரிசனம்' கலந்துரையாடல் கூட்டம்
ADDED : செப் 22, 2011 12:51 AM
திருநெல்வேலி : நவராத்திரி விழாவை முன்னிட்டு சக்தி தரிசனம் (தசரா)
கலந்துரையாடல் கூட்டல் நெல்லை டவுனில் நடந்தது. நெல்லை டவுனில் 21க்கும்
மேற்பட்ட அம்பாள் கோயில்கள் அமைந்துள்ளன. கடந்த ஆண்டு முதல் 'சக்தி
தரிசனம்' என்ற பெயரில் 21 அம்பாள் கோயில்கள் சப்பரத்தையும் விஜயதசமி நாளில்
ஒன்றிணைத்து ஒரே இடத்தில் அணிவகுத்து நிறுத்தி சிறப்பு பூஜைகள் செய்யும்
முறை அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு 21 முதல் 24 சப்பரங்கள் வரை
அணிவகுக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி விழா கோயில்களில்
27ம் தேதி துவங்குகிறது. திருவிழாவை முன்னிட்டு நெல்லை டவுனில் 'சக்தி
தரிசனம்' கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர்
சங்கங்களின் பேரவை மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் தலைமை
வகித்தார். நெல்லை கல்சுரல் அகடமி தலைவர் எம்.ஆர்.குணசேகரன், செயலாளர்
கே.எம்.காசிவிஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். தென் மாவட்ட பூஜாரிகள்
சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் பட்டர் இறைவணக்கம் பாடினார். தென் மாவட்ட
பூஜாரிகள் சங்கத்தின் தலைவர் வி.எஸ்.கார்த்திகேயன் குருக்கள் வரவேற்றார்.
கூட்டத்தில் நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த 21 அம்பாள் கோயில்களின்
நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் கடந்த
ஆண்டு நிறுத்தப்பட்ட அதே இடங்களில் அந்தந்த கோயில்களின் சப்பரங்களை
நிறுத்துவது, புதிதாக வரும் சப்பரங்கள் அதற்கு அடுத்த இடத்தில்
நிறுத்துவது, ஒவ்வொரு சப்பரமும் நெல்லையப்பர் கோயில் தேர் பக்கம் வரும்போது
அதற்கான வஸ்திரமும், மரியாதையும் செய்வது, இரவு ஒரு மணிக்குள் அனைத்து
சப்பரங்களையும் வந்து சேரும்படி ஒத்துழைப்பது, போலீசாருக்கு முழு
ஒத்துழைப்பு அளித்து செயல்படுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
கூட்ட ஏற்பாடுகளை தங்கவேலாண்டி, அங்கப்பன், சுரேஷ்சிவம், சுதன்சிவம்,
வியாபாரிகள் சங்க மேலாளர் சரவணன் மற்றும் கல்சுரல் அகடமி அங்கத்தினர்கள்,
கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.