Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அமைச்பர், எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிப்பால் களையிழந்த நூலகத் தந்தை பிறந்த நாள்

அமைச்பர், எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிப்பால் களையிழந்த நூலகத் தந்தை பிறந்த நாள்

அமைச்பர், எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிப்பால் களையிழந்த நூலகத் தந்தை பிறந்த நாள்

அமைச்பர், எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிப்பால் களையிழந்த நூலகத் தந்தை பிறந்த நாள்

ADDED : ஆக 14, 2011 02:48 AM


Google News
காரைக்கால் : காரைக்காலில் நடந்த நூலக தந்தை ரங்கநாதன் பிறந்த நாள் விழாவை அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்ததால் விழா மேடை வெறிச்சோடியது.காரைக்காலில் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்டோரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து எந்த தகவலும் பொதுமக்களுக்கு தெரிவிப்பதில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விழா மேடை வெறிச்சோடி கிடக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.நேற்று முன்தினம் நூலக தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் 120வது பிறந்த நாள் விழா கோவில்பத்து பெரியார் பள்ளியில் நடந்தது. விழாவில் தலைமை தாங்குவதாக இருந்த அமைச்சர் சந்திரகாசு, காரைக்கால் வளர்ச்சிக்குழு தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், சிவா, திருமுருகன் மற்றும் கலெக்டர் பிராங்க்ளின் லால்டின்குமா ஆகியோர் விழாவை புறக்கணித்தனர்.உதவி நூலக தகவல் அதிகாரி மஞ்சினி மட்டும் விழா மேடையில் அமர்ந்திருந்தார். விழாவை காண, விரல் விட்டு எண்ணும் அளவிலேயே மக்களும் அமர்ந்திருந்தனர்.

இதனால் பார்வையாளர் இருக்கை அனைத்தும் காலியாக கிடந்தன. ரங்கநாதனின் வாழ்வும், நூலகப் பணியில் நவீன தொழில்நுட்பம் என்ற தலைப்பில் தனி உரை நடந்தது. நூலகம் மிகுதியாய் பயன்படுவது இளைஞர்களுக்கா? முதியவர்களுக்கா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.கடைசியில் பட்டிமன்றபேச்பாளர்களே அரங்கநாதன் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்பலி பெலுத்தினர்.கடந்த வாரம் காரைக்கால் கிரிக்கெட் கிளப் சார்பில் நடந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us