/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் 3,500 மெட்ரிக் டன் அரிசி சப்ளைஆந்திராவிலிருந்து ரயில் மூலம் 3,500 மெட்ரிக் டன் அரிசி சப்ளை
ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் 3,500 மெட்ரிக் டன் அரிசி சப்ளை
ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் 3,500 மெட்ரிக் டன் அரிசி சப்ளை
ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் 3,500 மெட்ரிக் டன் அரிசி சப்ளை
ADDED : செப் 01, 2011 01:27 AM
சின்னசேலம் : ஆந்திரா மாநிலத்திலிருந்து 3,500 மெட்ரிக் டன் புழுங்கல் அரிசி ரயில் மூலம் நேற்று சின்னசேலத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஆந்திரா மாநிலம் பெத்தபல்லி என்ற இடத்திலிருந்து இந்திய உணவு கழகத்தின் மூலம் 3,500 மெட்ரிக் டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த அரிசி சரக்கு ரயில் மூலம் 57 பெட்டிகளில் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சின்னசேலத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, இருப்பு வைத்தனர். முன்னதாக இந்திய உணவு கழக மேலாளர் பன்னீர்செல்வம், சேமிப்பு கிடங்கு மேலாளர் மாரி முத்து மேற்பார்வையில் ரயிலிலிருந்து அரிசி மூட்டைகள் இறக்கப்பட்டன.